Thursday, September 26, 2013

மோடியின் பித்தலாட்டம்!

மோடியின் பித்தலாட்டம்! From : http://suunapaana.blogspot.in/2013/09/blog-post_25.html சமீப காலமாக மோடிமேனியா என்ற கொடிய நோய் பரவி வருகிறது. கோயபல்ஸ் பாணியில் குஜராத் முன்னேற்றம் என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அவை சரியா என சற்றே உரசி பார்ப்போம். இந்திய திட்ட குழு புள்ளிவிவரங்களின் படி குஜராத்தையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பார்ப்போம். 1. வறுமை கோட்டிற்கு கீழே குறைவாக வாழும் மக்கள் விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு 5வது இடம். குஜராத்திற்கு 9வது இடம் தான். குஜராத்தில் கால்வாசி பேர் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கின்றனர் No.States% Below Poverty LinePopulation 1Jammu & Kashmir9.412548926 2Kerala1233387677 3Delhi14.216753235 4Punjab15.927704236 5Tamil Nadu17.172138958 6Uttarakhand1810116752 7Haryana20.125353081 8Andhra Pradesh21.184665533 9Gujarat2360383628 10Karnataka23.661130704 (குறிப்பு - மக்கள் தொகை ஒரு கோடிக்கு கீழ் இருக்கும் மாநிலங்களை சேர்க்கவில்லை. அப்படி சேர்த்தால் குஜராத்தின் இடம் இன்னும் கீழே செல்லும்.) 2. சமூகத்தின் நாகரிகத்தை அளக்கும் ஆண்கள் பெண்கள் விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு 2வது இடம். குஜராத்திற்கு 14வது இடம் தான். அதாவது 1000 ஆண்களில் 995 பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். ஆனால் குஜராத்தில் 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இது தேசிய சராசரியை விட (940) வெகு குறைவு. No.StateNo of Females Per 1000 Males 1Kerala1084 2Tamil Nadu995 3Andhra Pradesh992 4Chhatisgarh991 5Orissa978 6Karnataka968 7Uttarakhand963 8Assam954 9Jharkhand947 10West Bengal947 11Madhya Pradesh930 12Rajasthan926 13Maharashtra925 14Gujarat918 3. குழந்தை பிறந்தவுடன் குறைவாக இறக்கும் விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு 2வது இடம். குஜராத்திற்கு 10வது இடம் தான். அதாவது 1000 குழந்தை பிறப்புகளில் தமிழ்நாட்டில் 22 குழந்தைகள் இறக்கின்றனர். ஆனால் குஜராத்தில் 41 குழந்தைகள் இறக்கின்றனர். இது ஒரு நாட்டின் மருத்துவம், ஆரோக்கியம், மனிதவளம் ஆகி யவற்றை குறிக்கும் இந்த விகிதத்தில் குஜராத் மிகவும் பின் தங்கியுள்ளது. No.StateInfant Deaths per 1000 birth 1Kerala12 2Tamil Nadu22 3Maharashtra25 4Delhi28 5Punjab30 6West Bengal32 7Karnataka35 8Uttarakhand36 9Jharkhand39 10Gujarat41 4. எழுத்தறிவு விகிதத்திலும் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கி உள்ளது. No.StateLiteracy Rate (2011) 1Kerala93.91 2Delhi86.34 3Maharashtra82.91 4Tamil Nadu80.33 5Uttarakhand79.63 6Gujarat79.31 இப்படி சமூக வாழ்க்கை தரத்தை அளக்கும் குறியீடுகளில் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கி உள்ளது. வளர்ச்சி, முன்னேற்றம் தான் சிறந்த ஆட்சியின் அறிகுறி என்றால், அதை கோரும் தகுதி மோடியின் குஜராத்திற்கு கிடையாது. குஜராத்தை விட முன்னனியில் இருக்கும் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கே அந்த தகுதி உண்டு. அதிமுக-வினர் இதை குறித்து கொள்ளலாம். குஜராத் முன்னேறிவிட்டது என்பது மாபெரும் பொய். புள்ளிராஜாக்கள் சொல்லும் குஜராத் முன்னேற்றம், வளர்ச்சி என்பது அண்டபுளுகு. புள்ளி விவர மோசடி செய்யும் மோடி வித்தைகளை கண்டு ஏமாற வேண்டாம். பொய், பித்தலாட்டங்கள் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் நச்சு கிருமிகளை புறந்தள்ளுவோம்! (தோழர் மருதையன் 2013, செப்டம்பர் 22 அன்று திருச்சியில் மோடியின் முகமூடியை கிழிக்கும் பொதுக்கூட்டத்தில் நடத்திய உரையை தழுவி எழுதியது.)

No comments:

Post a Comment