Monday, December 10, 2012

அந்த அமேசான் காடுகள் மிகவும் ஆபத்தானவை!!! - MAN Vs WILD




My Sincere Thanks to http://www.muthusiva.in/2012/12/man-vs-wild.html


அந்த அமேசான் காடுகள் மிகவும் ஆபத்தானவை!!! - MAN Vs WILD

நம்ம இம்சை அரசன்ல வர்ற அக்காமாலா, கப்ஸி தயாரிக்கிற காட்சி ஞாபகம் இருக்கா? "அரைத்த புயங்கொட்டையை வெண்ணீரில் கலந்து கொதிக்க விட வேண்டும்.. பின்பு அதனுள்  ஒரு கைப்பிடியளவு மண்புழுக்களை அள்ளி போடவேண்டும்" னு சொன்னவுடனே ஒரு வேலையாள் வாந்தி எடுப்பன். "பின்பு அதனுள் ஒரு முயலை மூன்று நாட்கள் நீந்த விட வேண்டும். பிறகு பாம்பு கழட்டி போட்ட சட்டையில் நன்றாக வடிகட்ட வேண்டும்"னு ன்னு சொன்னதும் "நானெல்லாம் சாக்கடையிலேயே ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்தவனைய்யா"ன்னு சொன்ன வடிவேலுகூட வாந்தி எடுத்துருவாரு. அதே மாதிரிதான் இங்கயும்.இவிங்க பண்றத பாத்தா யாரா இருந்தாலும் உவ்வே தான்.

மிஞ்சி மிஞ்சி போனா நாம என்ன என்னத்த திம்போம்? கோழி , ஆடு, மீன், இராலு, நண்டு சிலபேரு மாடு, பன்னி கூட... ஆனா இவிங்க இருக்காய்ங்களே... நடக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறது, தாவுறது, தவழ்றதுலருந்து உயிரோட எதாவது கண்ணுக்கு தெரிஞ்சாலே புடிச்சி திண்ணுடுறாய்ங்க. ஆத்தாடி .டிஸ்கவரி Man Vs Wild la ஒருத்தன் வர்றான் பாருங்க.

இந்த ப்ரோக்ராம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால அமேசான் காட்டுல 3500 வகை பூச்சிங்க இருந்துச்சாம். ஆனா இப்ப வெறும் 350 வகைதான் இருக்காம். மத்ததுங்க எல்லாம் என்ன  ஆச்சா? இவன் எல்லாத்தையும் புடிச்சி திண்ணுட்டாங்க. வழில போயிகிட்டேஇருக்கான்... ஒரு தவளை அதுபாட்டுக்கு சிவனேன்னு ஒரு மரத்துல உக்காந்துருக்கு ... உடனே அத புடிச்சி "ஐ... இத கொஞ்ச நேரம் மென்னுகிட்டே நடக்கலாம்.. இது ரொம்ப சுவையா இருக்கும்" அப்புடின்னு உடனே வாய்க்குள்ள தூக்கி போட்டு மெல்ல ஆரம்பிச்சிடுறாய்ங்க.அவன கொஞ்ச நாளு அமேசான் காடுங்களுக்குள்ள தொடந்து நடமாட விட்டா அங்க உள்ள மிச்சம் இருக்குற பூச்சி இனங்களையெல்லாம் அடியோட திண்ணே அழிச்சிருவான்.



அன்னிக்கு நா பாத்த ஒரு எபிசோடு

நம்மாளு வழக்கம் போல "இந்த காடுகள்ல மிகவும் கவனமா இருக்கனும்... இந்த காட்டுல கொடிய விஷமுள்ள பாம்புங்க நிறைய இருக்கு... அதுங்க மனுஷங்கள அப்புடியே விழுங்கிரும். அப்டின்னு சொல்லிகிட்டே பொயிட்டுருந்தான். திடீர்னு ஒரு மரத்த பாத்து 'இந்த மரப்பட்டைங்கள கொஞ்சம் சாப்டா பாம்பு கடிச்சா விஷம் ஏறுரத தடுக்கும் ன்னு கொஞ்சம் மரப்பட்டைங்கள  வெட்டி பையில போட்டுகிட்டான்... அவ்வளவு பயந்தவனாடா நீயி...

 கொஞ்ச தூரம் போயிட்டே இருந்துட்டு திடீர்னு "பாருங்க... பாருங்க இங்க பாருங்க" ன்னு கத்துனான். உண்மையிலயே ஒரு ஆறடி நீள பாம்பு ஆந்த்ரா மெஸ் அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்டா மாதிரி உப்பலான வயிரோட அந்த இடத்த விட்டு நகராம படுத்துருந்துச்சி.. சரி இவந்தான் பாம்ப கண்டா பயப்புடுவானே ஓடிருவான்னு பாத்தா மெதுவா அந்த பாம்புக்கு பின்னாடி போய் அது கழுத்த புடிச்சி தூக்கிட்டான்...

ஏன் இந்த குருட்டு நாயி ஓடாம இப்புடி பண்றான்னு பாத்தா... பையிலருந்து ஒரு கத்திய எடுத்து அந்த பாம்பு தலைய தனியா வெட்டி போட்டுட்டு அடுத்த அஞ்சி நிமிஷத்துல அந்த பாம்போட கொடல தனியா உருவி வெளிய எடுத்துட்டு "பாம்போட வெய்ட்டுல மூணுல ரெண்டு பகுதி அதோட குடல் தான்... அதுனால குடல தனியா எடுத்துட்டா இத தூக்கிட்டு போக மிக ஈசியா இருக்கும்" அப்புடின்னு சொல்லிட்ட்டு அந்த பாம்ப அப்புடியே தோள்ல போட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டான். ஏண்டா டேய் பாம்புககிட்டருந்து நீ தப்பிக்க மரத்து வேரெல்லாம் எடுத்து வச்சிருக்க உன்கிட்டருந்து தப்பிக்க அதுங்க எதடா எடுத்து வச்சிருக்கனும்? கொஞ்ச நேரத்துல அத நெருப்புல போட்டு சுட்டு "ஹ்ம்ம்ம்.... இன்னிக்கு நைட் டின்னர் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு... " ன்னு சாப்புட்டுகிட்டு இருக்குறான். 



அப்புறம் போயிட்டே இருந்தான்.. ஒரு பட்டுப்போன மரம் இருந்துச்சி.... அத ரெண்டா கையால ஒடைச்சிட்டு உள்ள பாத்தான்... பாத்துட்டு ஒரு ரியாக்சன் குடுத்தான் பாருங்க.. "ஹையோ நா இத கொஞ்சம் கூட எதிர்பாக்கல... நா ரொம்ப அதிர்ஷ்டக்காரன்" என்னடா இது இந்த நாய்க்கு மரத்துக்குள்ளருந்து பொதையல் எதுவும் கெடைச்சிருச்சோன்னு பாத்தா, உள்ள வெள்ளைக்கலர்ல சின்ன சின்ன புழுவா இருக்கு.

உடனே அதுல ரெண்ட கையில புடிச்சி "இந்த புழுக்கல்ல புரத சத்து மிகவும் அதிக அளவுல காணப்படுது.. அதுனால இதுங்கள கொஞ்சம் திண்ணா எனக்கு அதிக அளவுள சக்தி கிடைச்சி நா ரொம்ப தூரம் நடக்கலாம்" ன்னு சொல்லிட்டு அத வாயில போட்டு கருமுருன்னு மெண்ணு திண்ணுட்டான்... (உங்களூக்கு வாந்தி வர்ற மாதிரி இருக்குள்ள... எனக்கும் அதே ஃபீலிங் தான்) அதோட  மட்டும் இல்லாம "இந்த புழுக்கல நா கொஞ்சம் சேகரிச்சி வச்சிக்குறேன்... வழில நொறுக்கு தீனிமாதிரி இத உபயோகிச்சிகிட்டா நல்லா இருக்கும்"ன்னு சொல்லி ஒரு சின்ன சுருக்குபைபுல  மிச்சம் இருக்கதையும் அள்ளி போட்டுகிட்டு கெளம்பிட்டான். என்ன வாயிடா அது என்ன வாயி?

அப்புறம் இதெல்லாம் முடிச்சிட்டு ஒரு குகைக்கு போணான்... " இங்க உள்ள போயி பாத்தா என்னோட நைட் சாப்பாட்டுக்கு எதாவது கிடைக்கும்முனு நினைக்கிறேன்"னு உள்ள போயி தீ பந்தந்த வச்சிகிட்டு தேடுனான்... ஒரு ப்ரம்மாண்டமான பெருச்சாளி... "இது மட்டும் புடிச்சிட்டா எனக்கு இன்னும் ரெண்டு வேளைக்கு சாப்பாட்டு ப்ரச்சனையே இல்ல" அப்புடின்னு சொல்லிகிட்டெ அத தொறத்த அது டக்குன்னு ஒரு பொந்துக்குள்ள ஓடிருச்சி..
அதுக்கு ஆயுசு கெட்டி போல..  அப்புறம் அந்த குகையையே சுத்தி பாத்த அவன்
"இங்க பாருங்களேன்... என்னால இத நம்பவே முடியலன்னு" ஒரு ஜெர்க்க குடுத்தான்.. அய்யய்ய திரும்ப எதோ புழுங்கள பாத்துட்டான் போலருக்குடான்னு நெனச்சா இந்த தடவ  புழு இல்ல... பூச்சி.. சிலந்தி பூச்சி... ஒரு பெரிய சிலந்தி பூச்சி ஒண்ணு வலையில நின்னுச்சி..

"இங்க பாருங்களேன்.. இவ்வளவு பெரிய சிலந்தி பூச்சிய நா பாத்ததே இல்லை... நா தேள் சாப்புட்ட்டுருக்கேன்.. நட்டுவாக்கிளி சாப்டுருக்கேன்... ஆனா இவ்வளவு பெரிய சிலந்திய சாப்டதே இல்லை.. அதோட உடம்ப பாருங்களேன்... தேள் மாதிரியே இருக்கு  இது எதோ hybrid வகைய சேந்ததுன்னு நெனைக்கிறேன்" (ஏன்டா இல்லைன்னா மட்டும்
அத திங்காமயா விடப்போற... திண்ணு தொலை) அந்த சிலந்தி பூச்சிய கையில எடுத்து  மிஸ்டர் பீன் இரால சாப்புடுற மாதிரியே அந்த பூச்சிய கடிச்சிட்டு ஒண்ணு சொன்னான் பாருங்க... "நா அந்த சிலந்தியோட பின் பகுதிய கடிச்சிட்டேன்னு நெனைக்கிறேன்". ஏண்டா 6 அடி நீள பாம்பையா தூக்கிப்போட்டு தூர் வாருற.. இதுல சிலந்திய நீ முன்னால கடிச்ச என்ன பின்னால கடிச்சா என்ன?


இந்தாளுக்கு காட்டுல இருக்கதுங்கள எப்புயெல்லாம் கொல்லலாம்னுதான் ஸ்பெசல் ட்ரெயினிங் குடுத்துருப்பாய்ங்க போல. ஒரு நாள் போயிட்டே இருந்தான். திடீர்னு நின்னான்... "இங்க எங்கயோ கோழிங்க கத்துற சத்தம் கேக்குது.  அதுனால நா இங்கயே கொஞ்ச நேரம் தங்கி இருந்து அதுங்கள வேட்டையாட போறேன்னு படக்குன்னு நாலு குச்சிங்கள வெட்டுனான், ரெண்டுமூனு கெளைங்கள அப்புடியே ஒடிச்சான் ஒரு ஒருமணி நேரத்துல
கடையவே போட்டுட்டான். கிட்டத்தட்ட ஒரு ஆளு தூங்குற மாதிரி ஒரு சின்ன வீட்டையே கட்டிபுட்டான்.  "சரி இப்ப வேட்டையாடனும்... ஆனா அதுக்கு எனக்கு இப்போ அம்புங்க வேணும்" நேரான ஒரு குச்சியை ஒடைச்சான்..

அங்கன்னு பாத்து எவனோ பல வருசத்த்துக்கு முன்னாடி குடிச்சிட்டு போட்ட ஒரு பாதி  பீர் பாட்டில் கெடக்கு. அதோட அடிப்பகுதியே அப்புடியே கொஞ்ச கொஞ்சமா ஒடச்சி கூரா ஆக்கி அந்த குச்சிக்கு மொனையில வச்சி கட்டிட்டான்... அம்பு ரெடி... அடப்பாவி பல வித்தைகள கையில வச்சிருக்கான்யா. சும்மாவே ஜங்கு ஜங்குன்னு ஆடுவான்... இதுல சலங்கைய வேற கட்டியாச்சின்னா குஷிதான்... வெறும் கையையும் வாயையும் வச்சே பல ப்ராணிகளை கடிச்சி திண்ணவனுக்கு அம்பு கெடைச்தும் சும்மா இருப்பானா.. பத்தே நிமிசம் தான்.. 3 அடிக்கு ஒரு வான் கோழிமாதிரி எதையோ தூக்கிட்டு வந்துட்டான். அப்புறம் என்ன உக்காந்து மேய வேண்டியதுதான். நெருப்ப கொழுத்தி போட்டு, பாதி கோழிய சுட்டு திண்ணுட்டு பாதிய எடுத்து பைக்குள்ள வச்சிகிட்டான்.

அப்புறம் படுக்கும் போது சொல்றான். "நா இந்த நெருப்ப அணைக்க மாட்டேன்.. இது தான் என்ன காட்டு  விலங்குகள்கிட்டருந்து பாதுகாக்க உதவும்"

டேய் அதுங்க ஏண்டா உன்ன தேடி  வரப்போவுது...உன்னத்தேடி ஒரு காட்டு விலங்கு வருதுண்ணா அதுக்கு  விதி முடிஞ்சி போச்சின்னு  அர்த்தம்டா!!

No comments:

Post a Comment