Monday, November 26, 2012

ரயில் பயணம் செய்பவரா ? டிசம்பர் 1 முதல் கவனம் !

 

 My Sincere thanks to http://kovaisakthi.blogspot.in/2012/11/1.html

ரயில் பயணம் செய்பவரா ? டிசம்பர் 1 முதல் கவனம் !


மறவாதீர் ! மறவாதீர் ! மறவாதீர் ! 

         

 டிசம்பர் 1ம் தேதியில்  முதல்  முன்பதிவு வகுப்புகளில் பயணம் செய்பவர்கள் பயணத்தின்போது புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதன் அடையாள அட்டைகளாக :

            

  • வாக்காளர் அடையாள அட்டை, 
  • பாஸ்போர்ட், 
  • பான் கார்டு, 
  • டிரைவிங் லைசென்ஸ்,
  • வரிசை எண்களுடன் வழங்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டைகள், 
  • பென்ஷன் பே ஆர்டர், 
  • புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு,
  • சீனியர் சிட்டிசன் கார்டு, 
  • பிபிஎல் கார்டு, 
  • போட்டோவுடன் கூடிய இஎஸ்ஐ கார்டு, 
  • சிஜிஎச்எஸ் கார்டு 
  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, 
  • கல்லூரிகளில் இருந்து வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை, 
  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பாஸ் புத்தகம், 
  • லேமினேட் செய்யப்பட்ட போட்டோவுடன் கூடிய வங்கிகளின் கிரடிட் கார்டு,
  •  ஆதார் அடையாள அட்டை, 
  • வரிசை எண்களுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை
ஆகியவற்றை பயன்படுத்தலாம். 

எந்த அடையாள அட்டையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் புகைப்படம் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஜெராக்ஸ் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

               

ஒரே டிக்கெட்டில் பலர் குழுவாக பயணித்தாலும் அனைவரிடமும் செல்லுபடியாகக்கூடிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


குடும்ப சகிதமாக பயணம் மேற்கொண்டால், ஒருவர் மட்டும் அடையாள அட்டை வைத்திருந்தால் போதுமானது என்றும், மற்ற எந்த பிரிவில் சென்றாலும், தனித்தனி அடையாள அட்டைகள் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டும், விபத்து நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளர் கண்டறியும் நோக்கத்தோடும், இந்த புதிய முறையை அமல்படுத்த திட்டமிட்டதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment