Wednesday, November 21, 2012

செல்பேசியில் தமிழ்


Mugam Theriya Bloggerukku Nanri

செல்பேசியில் தமிழ்

வணக்கம் நண்பர்களே..!

செல்பேசியில் தமிழைக் கொண்டு வர  உங்கள் செல்பேசியில் ஒரு சிறிய
மாற்றத்தை செய்தாலே போதுமானது.

இன்று இருக்கும் தொழில்நுட்ப உலகத்தில் இதெல்லாம் ஒரு சாதாரண வேலைதான்.
இன்னும் உங்கள் செல்பேசிகளில் நீங்கள் தமிழைப் படிக்க
சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்
களா?


தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் கட்டகட்டமாகவே காட்சியளிக்கிறதா?
அப்படியென்றால் நீங்கள் இன்னும் பழைய தொழில்நுட்பத்தையே
பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அல்லது உங்கள் மொபைல் பிரௌசரில்
மாற்றத்தைக்கொண்டு வரவில்லை என அர்த்தம்.

சற்றும் தாமதிக்காமல் இந்த மாற்றத்தை உங்கள் மொபைலில் செய்துவிடுங்கள்..

தற்போதுள்ள எல்லா தமிழ்வலைப்பக்கங்களுமே Unicode தமிழில்
எழுதப்பட்டதுதான். எனவே நீங்கள் எந்த மொபைலைப்
பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் அதில் தமிழ்வலைப்பக்கங்களை எளிதாக காண
முடியும்.

அதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் Opera Mini Browser
பயன்படுத்தியிருந்தாலே போதுமானது. உங்கள் Opera Mini Browser-ஐப்
பயன்படுத்தி வலைத்தளங்களை முழுமையாக பார்வையிட முடியும். எழுத்துகளும்
சிதையாமல் சிறந்த முறையில் காட்சி அளிக்கும்.

மாற்றத்தை எப்படி செய்வது?

உங்கள் செல்பேசியில் Opera Mini Browser நிறுவியிருக்க வேண்டும். Opera
Mini Browser இல்லாதவர்கள் இந்த முகவரியில்  http://www.opera.com சென்று
Opera Mini Browser -ஐத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.


பிறகு நீங்கள் உங்கள் பிரவுசரில் ஏதாவது ஒரு தமிழ் வலைத்தளத்தை திறந்து
பார்த்தீர்களானால் இப்படித்தான் காட்சி அளிக்கும்.

இவ்வாறு காட்சியளிப்பதை தவிர்க்க உங்கள் பிரௌசரின் அட்ரஸ்பாரில்
about:config என தட்டச்சிட்டு Enter தட்டவும்.

உடனே புதிதாக ஒரு மெனு தோன்றும். அந்த Power user setting-ல் Use bitmap
fonts for complex scripts என்பதில் yes என்பதை தேர்ந்தெடுங்கள்.

இப்போது கீழிருக்கும் Save என்பதை கிளிக் செய்து மாற்றத்தை சேமித்துவிடுங்கள்.



இப்போது உங்கள் மொபைலிலும் தமிழ் வலைப்பக்கங்கள் முழுமையாக தமிழில்
படிப்பதற்கு ஏற்றவாறு காட்சியளிக்கும்.
3 attachments — Download all attachments   View all images   Share all images  
setttings-for-tamil-webpage-in-mobile.jpgsetttings-for-tamil-webpage-in-mobile.jpg
61K   View   Share   Download  
setttings-for-tamil-webpage-in-mobile1.jpgsetttings-for-tamil-webpage-in-mobile1.jpg
35K   View   Share   Download  
setttings-for-tamil-webpage-in-mobile3.jpgsetttings-for-tamil-webpage-in-mobile3.jpg
31K   View   Share   Downlo

No comments:

Post a Comment